Wednesday, 15 June 2016

நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மானிடருக்கு ஒரு முன்மாதிரி ஆவார்கள்,

அன்போடு உறவுகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

ரபீஉல் அவ்வல் மாதம் என்பது எமது நபி பிறந்த மாதம். அவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையை தினமும் நினைவு கூறும் நாம் இந்ததத் தருணத்தில் வேஷேடமாக நினைவு படுத்தி அவரின் வழி நடக்க முயட்சிப்போமாக.

இரு வருடங்களுக்கு முன் ஆற்றிய உரையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கேட்டு பயன் பெறுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கிறேன்,

வஸ்ஸலாம்

அன்போடு இஸ்மாயில் மௌலவி


நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மானிடருக்கு ஒரு முன்மாதிரி ஆவார்கள், அனைத்துத் துறையிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். ஆன்மீகத் தலைவராகஅரசியல் தலைவராகபடைத்தளபதியாகஆசிரியராக,கணவராகதந்தையாகநண்பராகசமூகத் தலைவராகசமூகச் சேவகராகவியாபாரியாக. அனைத்துத் துறைக்கும் முன்மாதியாகத் திகழ்ந்தார்கள். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

v  அல்லாஹ்வின் மீதும்இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்துஅல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 
(
அல்-குர்ஆன் 33:21)

v (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(
அல்-குர்ஆன் 21: 107)
v  
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்-குர்ஆன் 34:28)

v (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(
அல்-குர்ஆன் 68:4)

No comments:

Post a Comment