About Us

இலங்கையின் 'கண்டி' மாநகரில் அமைந்துள்ள 'மடவள பஸார்' என்ற முஸ்லிம் கிராமத்தில் 1972ஆம் ஆண்டில் பிறந்த நான், எனது ஆரம்பக் கல்வியை 'மடவள பஸார்' 'மதீனா' தேசிய பாடசாலையில் ஆரம்பித்ததோடு, இஸ்லாமிய மார்க்கக் கல்வியை களுத்துறை மாவட்டத்தின் பேருவள நகரில் அமைந்துள்ள் 'ஜாமியா நளீமியா இஸ்லாமியா' எனும் கலாசாலையில் கற்று, அஷ் ஷெய்க் மற்றும் அல் ஆலிம் பட்டங்களை 1996 ஆம் ஆண்டில் பெற்றேன். இதே வேளை, 'பேராதனைப் பல்கலைக் கழகத்தில்' வெளிவாரியாகப் பதிந்து கலைமாணிப் பட்டத்தையும் 1997ஆம் ஆண்டில் பெற்றேன்.

2;;000ஆம் ஆண்டில் தொழில்;; நிமித்தம் இங்கிலாந்துக்கு வந்தது முதல் பல இடங்களில் குத்பா உரைகள் நிகழ்த்தி வருகிறேன். அவற்றில் கைவசம் இருந்த சில குத்பாக்களின் பதிவுகளை இந்த 'புலொக்'கில் பதிவிறக்கம் செய்துள்ளேன். எனது இந்த குத்பா உரைகளில் இருக்கின்ற நன்மைகள் யாவும் அல்லாஹ்வின் அருளால் நிகழ்ந்ததாகும். கெடுதிகள் யாவும் எனது பலவீனத்தால் ஏற்பட்டதாகும் என்று தாழ்மையாகக் கூறிக் கொண்டு, இறைவா! இதன் மூலம் தமிழ் மொழியறிந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு ஏதேனும் பயன் கிடைக்கச் செய்வாயாக! என்ற பிரார்த்தனையோடு விடை பெறுகிறேன்.

இப்படிக்கு

என்றும் உண்மையுள்ள
அஷ் ஷெய்க் முஹம்மது இஸ்மாயில் (நளீமி)பீ.ஏ(இலங்கை)